காசநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் வருடத்திற்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் பயனாக காசநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நிகழாண்டில் 10.28 லட்சம் பேருக்கு காச நோயின் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாகவே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் போன்ற வடமாநிலங்களில் காசநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதன் நீட்சியாகவே நிகழாண்டில் புள்ளி விவரங்கள் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 4.27 லட்சத்திற்கும் அதிகமான காச நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 77,019 பேருக்கு காசநோய் பாதிப்பு இருக்கிறது. அவர்களின் 17,771 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 60,048 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையானது கடந்த வருட காலகட்டத்தில் 13 சதவிகிதம் குறைவாக இருந்துள்ளது. ஆனால் இது நிகழாண்டில் கடந்த காலத்தைக் காட்டிலும் 13 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.