தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வழிகள்
பாதுகாப்பு கருவி:
பாதுகாப்புக் கருவிகளை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும் மற்றும் கற்று தர வேண்டும்.
பாதுகாப்பு குறிப்புகள்:
தொழிற்சாலைகளில் அதிக இடங்களில் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களை அச்சிட்டு வைக்கவேண்டும். அதனை மீண்டும் மீண்டும் படிப்பதினால் மனதில் ஆழமாக பதிந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
பாதுகாப்பு பயிற்சி:
விபத்து என ஒன்று நேர்ந்தால் அதில் இருந்து தப்புவது எப்படி என பயிற்சி அளித்து இருக்க வேண்டும்.
பாதுகாப்பை பழக்கமாக்கவும் :
ஒரே விஷயத்தை செய்துவந்தால் பழக்கப்பட்டு விடும். அதே போன்று பாதுகாப்பு கருவிகளையும் தொடர்ந்து உபயோகப்படுத்த வைத்து அதனையும் பழக்கப்படுத்த வேண்டும்.
தனிமனித பாதுகாப்பு:
அனைவரையும் ஒன்றாக கருதக்கூடாது எடுத்துக்காட்டாக பெண்கள் ஆண்களைவிட வலிமையில் பின்தங்கியவர்கள். கணம் கூடிய பொருட்களை யாரால் கையாள முடியுமோ அவர்கள் மட்டுமே கையாள வேண்டும். இதுவும் விபத்தை தடுக்கும் ஒரு வழியாகும்.
சுற்றுச்சூழல்:
தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் போதுமானதாக இருக்க வேண்டும்.
இயந்திரங்களின் குறிப்பு:
ஆபத்துக்கு உரிய இயந்திரங்களின் அருகில் பணிபுரியும் பொழுது அதனை பற்றிய குறிப்புகள் அதன் அருகிலேயே ஒட்டப்பட்டு இருக்கவேண்டும். அதன் மூலம் இயந்திரத்தை எப்படி கையாள வேண்டும் என தொழிலாளிகள் அறிந்துகொள்வார்கள்.