உங்கள் ஸ்மார்ட் போனில் ரூபாய்.10,00000 மதிப்பிலான வேலை கிடைத்திருப்பதாக எஸ்எம்எஸ் வந்தால் அதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் உண்மையில் அதுபோன்ற பொய்யான செய்திகள் வாயிலாக மக்களின் கணக்குகள் காலியாகிறது. இதுகுறித்து இங்கே தெரிந்து கொள்வோம். அதாவது, உங்களுக்கான வேலைவாய்ப்பு நேரடியாக sms வாயிலாக அனுப்பப்படும். அவற்றில் உங்களின் விண்ணப்பம், சில தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை கேட்கப்படும். ஆனால் இதற்கு பின்னனியில் ஹேக்கர்கள் இருக்கின்றனர்.
உண்மையில் இச்செய்தி வேலை வாய்ப்புகளில் கடைசியிலுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் வாயிலாக உங்களது தனிப்பட்ட தகவலை உள்ளிடுமாறு கேட்கப்படும். இந்த இணைப்பைத் திறக்க முயற்சிக்கும் போது நீங்கள் நேரடியாக மோசடி இணையதளத்தின் பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதனிடையில் இந்த இணையதளம் உங்களுக்கு வித்தியாசமாகத் தெரியாது.
எனினும் நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை இங்கே உள்ளிடும் போது, இத்தகவல் நேரடியாக ஹேக்கர்களை சென்றடையும். அதன்பின் உங்களது கணக்கு அவர்களின் இலக்காகி அது காலியாகி விடும். இதனை நீங்கள் விரும்பவில்லை எனில், முதலில் இது போன்ற செய்திகளைப் பார்த்தவுடன் உடனே அவற்றை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் பல சிரமத்திற்கு ஆளாக நேரிடும்