தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Categories