Categories
தேசிய செய்திகள்

ஒழுங்கா இருங்க…! இல்லன்னா அவ்வளவு தான் பாத்துக்கோ…. பள்ளிக்கு பட்டா கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்…!!!

அசாம் மாநிலம் தாராப்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரிதிமேதா தாஸ். 11 வருடங்களுக்கும் மேலாக இவர் இதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியை தூக்கி வந்து பள்ளி வளாகத்தில் வளம் வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்து காவல்துறை வந்து விசாரித்ததில் தலைமை ஆசிரியர் திரிதிமெதா ஆயுதத்தை மறைத்து இயல்பாக இருந்துள்ளார். பின்னர் அவரிடம் சோதனை இட்டபோது பட்டாகத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆசிரியர் திரிதி மேதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பள்ளியில் உள்ள ஒழுங்கீனம் காரணமாக தலைமை ஆசிரியர் திரிதிமிதா ஆத்திரமடைந்துள்ளார். பள்ளிக்கு ஏழு ஆசிரியர்கள் மட்டுமே போதும் என்ற நிலையில் 13 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிள் பலரும் ஒழுங்கீனமாக இருப்பதால் தலைமை ஆசிரியருக்கு கோபம். எனவே மாணவர்களு மற்றும் ஆசிரியர்களுக்கி பயம் வந்து ஒழுங்குக்கு வரவேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு பட்டாக் கத்தியை தூக்கி வந்துள்ளார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |