உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கலைந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசாரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.