சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் வசித்த 17 வயது சிறுமி கடந்த 2- ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார்(26) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தினேஷ்குமார் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.