மகரம் ராசி அன்பர்களே..! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். வாகனம் வாங்க கூடிய எண்ணம் மேலோங்கும். அந்த யோகம் உங்களுக்கு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு அவசியம், சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். குடும்ப சுமை கொஞ்சம் கூடும். பணவரவு நல்லபடியாகவே இருக்கும். ஆனால் வீண் செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும், பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் இருக்க வேண்டும்.
பயணங்களின் பொழுது வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கை வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். தயவு செய்து இதை புரிந்துகொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. மாணவச் செல்வங்களுக்கு கல்வியிலிருந்து தடை விலகி செல்லும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்த்து விட்டுச் செல்வது ரொம்ப நல்லது.
அதேபோல தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டு செல்லுங்கள். உங்களுடைய மனம் ஓரளவு அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனம் அமைதியாக இருந்து விட்டாலே அனைத்து காரியங்களும் வெற்றியை கொடுக்கும். அதுபோலவே இரண்டு நிமிடம் தியானம் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்துவிட்டு பின்னர் பாடங்களைப் படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்