தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
இதனால் லவ் டுடே திரைப்படம் மேலும் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் நடிகர் விஜய் சாரிடம் கதை சொல்லி இருக்கிறேன். அதைப்பற்றி தற்போது பேசக்கூடாது. ஆனால் கண்டிப்பாக அதைப் பற்றி விரைவில் பேசுவோம் என்று கூறியுள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதன் கூறிய தகவலால் கூறிய தகவலால் கூடிய விரைவில் விஜய் உடன் இணைந்து புதிய படம் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.