Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் இதில் வழங்கப்படுகிறது. அதிவேக இண்டர்நெட், குளிர்சாதனவசதி, எல்.இ.டி டிவி ஆகிய சேவைகளோடு, 24 மணிநேரமும் உணவு, குடிநீர் ஆகிய வசதிகளும் வந்தேபாரத் ரயில்களில் வழங்கப்படுகிறது. இன்று 5வது வழித்தடமாக சென்னை-மைசூர் இடையில் இந்த ரயில் சேவையானது தொடங்கியது. இன்று சோதனை முறையில் இயக்கப்படும் இந்த ரயில் சேவையானது இம்மாதம் 11ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயணத்துக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Categories

Tech |