கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை பகுதியில் கூலி தொழிலாளியான சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 3-வது மகள் அபிதா பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு காதல் விவகாரம் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் அபிதாவை திருமணம் செய்ய மறுத்தார்.
இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தார். கடந்த 1-ஆம் தேதி திடீரென வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்த அபிதாவை பெற்றோர் மார்த்தாண்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அபிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.