Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…தடைபட்ட காரியங்கள் நடைபெறும்…நீண்ட நாள் ஆசை நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும், அதனால் திருப்தி நிலையில் இருப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் புகழ் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை இன்று நிறை வேறும் நாளாகவே இருக்கும்.

மாணவச் செல்வங்களுக்கு கையிலிருந்த தடை விலகி செல்லும், சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லை தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இன்று இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் பாடங்களைப் படியுங்கள். உங்களுடைய நினைவில் வைத்து கொள்ள உதவும். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.

அதுமட்டுமில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது நீங்கள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பதட்டப்படாமல் செயல்படுவதும் ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அதுபோலவே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |