விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் புத்தகமாக வெளியிடப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனே களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கி வந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிர் வினையாற்றும் வகையில் மனுஸ்மிருதி நூலில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாராயணன் திருப்பதி இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், இந்து பெண்களை இழிவுபடுத்தும் புத்தகத்தை அச்சிடு அச்சடித்து வெளியிட்டு பொதுவெளியில் விநியோகம் செய்யும் திருமாவளவனை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்வதாக ட்விட் செய்து உள்ளார்.