Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்”….. கமலுக்கு வாழ்த்து சொன்ன அன்புமணி…. வைரல் பதிவு….!!!!!

கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

அந்த விஷயத்தில் கமல் ஒரு தைரியமான மனிதர்... ரஜினியை போட்டுத் தாக்கும்  அன்புமணி! | Anbumani Ramadoss has urged Rajinikanth to be clear for coming  to politics - Tamil Oneindia

இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், ”மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கலைஞருமான கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நாடு போற்றும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |