மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் யோசித்து செய்யவேண்டிய நாளாகவே இருக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி தாமதப்படலாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீடுமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமையும். இன்று காரியத்தடை, தாமதம் கொஞ்சம் உண்டாகலாம். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது ரொம்ப கவனமாகவே செய்யுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முரட்டு தைரியம் வேண்டாம்.
இன்று அலட்சியம் காட்டாமல் காரியங்களைச் செய்யுங்கள், ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாகவே இருக்கும். பொருளாதார சிக்கல்கள் உங்களுக்கு சின்னதாக ஏற்பட்டு நீங்கும். இன்று யாரிடமும் கடன் மட்டும் வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக பாடங்களை படிப்பது ரொம்பவே நல்லது. படித்ததை எழுதிப் பார்ப்பதும் ரொம்ப நல்லது. அது மட்டுமில்லை இன்று தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு, பழவகைகளையும்,பால் அருந்திவிட்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இரண்டு நிமிடம் தியானம் இருப்பது ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்