மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்குவங்கம், உத்தரகாண்ட், திரிபுரா, சிக்கிம், ராஜஸ்தான், பஞ்சாப், நாகலாந்து, மிசோரம், மேகலாயா, மணிப்பூர், கேரளா, இமாச்சல் பிரதேசம், அசாம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியமானது 15-வது நிதிய குழுவின் பரிந்துரையின்படி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 86,201 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 7,183.41 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 12 தவணைகளாக விடுவிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாதத்தில் 8-வது தவணையுடன் சேர்த்து நடப்பாண்டில் 57,467.33 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறையின் காரணமாக நிதி குழுவின் பரிந்துரையின் படி மாநிலங்களுக்கு மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.