ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாளாகவே இருக்கும். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும், ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும். தேவையான அளவில் பணம் உதவியும் கிடைக்கும்.
தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லை காரசாரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். தேர்வு முடியும் வரை பலவகை உணவுகளை சாப்பிடுங்கள், இரவில் பால் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். மனம் ஓரளவு அமைதியாகவே இருக்கும். மனநிம்மதி இன்று வெற்றிக்கு வழிவகுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்