தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர், செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
இதன்பின் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன் கோவில், தேரடி, காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்களிடம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர், வார்டு செயலாளர், பொருளாளர் என பலர் கலந்து கொண்டார்கள்.