தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் புகழ்பெற்ற துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்தை வசந்த் ரவி இயக்குகிறார்.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ் பாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு புட்ட பொம்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் புட்ட பொம்மா திரைப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது