நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம்.
நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது என்பது இரவில் தூங்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் எண்ணெய்யை தொப்புளில் விட்டு,சுற்றியும் ஒன்றரை அங்குலம், வலது மற்றும் இடது புறமாக மசாஜ் செய்து வருவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான நன்மைகளும் உண்டு.
பொதுவாக தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடல்சூடு, கண் வறட்சி, பித்த வெடிப்பு, தலை முடி உதிராது, வறண்ட சருமம், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகள் குணமாகும். குறிப்பாக என்னென்ன நோய்களை குணமாக்கும்.
வயிற்று வலி: நல்ல எண்ணெய்:
உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய வயிற்று வலியை குணமாக்கும், ஆற்றல் இந்த முறைக்கு உண்டு. இதற்கு எண்ணெய் அதாவது நல்லெண்ணையை தொப்புளில் வயிற்றை சுற்றி ஒன்றரை அங்குலம் நன்றாக தேய்த்து வந்தால் வயிற்று வலி விரைவில் குணமாகும்.
வாதம்-பித்தம், கபம்-கடுகு எண்ணெய்:
ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் இந்த முறைக்கு உண்டு. கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு வர உடல் வறட்சியினால் உண்டாகக்கூடிய உதடு வெடிப்பு குணமாகும். கை கால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் சீராகி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும். நரம்புத் தளர்ச்சியினால் அவதிப்படுபவர்கள் இந்த கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வர உடல் நடுக்கம், நரம்பு தளர்ச்சி குணமாகும்.
அழகு-வேப்பம் எண்ணெய்:
சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கக்கூடியது. முகப்பருவினால் அவதிப்படுபவர்கள் வேப்ப எண்ணெய்யை தொப்புளில் விட்டு தேய்த்து வர பருக்கள் மறையும் தேமல் தோல் வறட்சி தோல் போன்ற சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொப்புளில் வேப்பெண்ணெய் விட்டு தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நெய்யை தொப்புளில் விட்டு தேய்த்துவர சருமம் மிருதுவாகும், முகப்பொலிவு பெறும்.
கருத்தரித்தல் -தேங்காய் எண்ணெய்,ஆலிவ் ஆயில்:
தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால், ஆண்,பெண் மலட்டுத்தன்மை குணமாகும். பெண்களின் கருப்பை பலத்தையும், குழந்தை பேறுக்காக காத்திருப்போருக்கும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது. இந்த முறையானது கருச்சிதைவினால் அவதிப்படும் பெண்கள், வயிற்றை சுற்றியும் இரவு தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் தேய்த்து தூங்கி வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.
தலைமுடி வளர்ச்சி-விளக்கெண்ணெய்:
தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்கள்விளக்கெண்ணெயை தொப்புளில் விட்டு தேய்த்துவர மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டு வலி குணமாகும்.