செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்… குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்..
திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி ஸ்கூல், அங்குதான் இந்தியை திணிக்கிறாங்க. ஸ்டாலின் மகள் நடத்தக்கூடிய சன்சைன் ஸ்கூல்ல தான் ஹிந்தி திணிக்கிறாங்க. மக்களை மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இந்த மழை வெள்ள நிவாரண பணிகள் சரிவர நடக்கவில்லை. இது மாதிரியான பொது பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக, இந்த ஹிந்தி எதிர்ப்பு, மாநில உரிமை போன்ற விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேதகு ஆளுநரை எதிர்த்து ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்கள். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று.. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது. ஆளுநர் உண்மைகளை பேசுகிறார், அவர் என்ன சொன்னாரு ? நான்கு நாட்களுக்கு பிறகு தானே NIAவுக்கு போச்சு என உண்மைதான சொன்னாரு. ஆளுநர் நம்முடைய தமிழகத்திலே நடைபெறக்கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
பிரிவினைவாத, பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஆளுநர் அவருடைய கடமையை செய்கிறார், உடனே அவரை விலக்கணும் என சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் ஹிந்து மக்கள் கட்சியின் சார்பிலே எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.