செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்… பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க.
பால் விலை உயர்வு என்பது, அதை எதிர்த்து கருத்து சொல்ல, அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கக் கூடியது, அதை உயர்த்தினால் வரவேற்கக் கூடியது. ஆரஞ்சு பால் அப்படின்னு ஒன்றை தயார் பண்ணி, அதன் மூலம் மறைமுகமா இப்படி விலை ஏத்துறது, எந்த விதத்தில் நியாயம் ? அவரு எப்படி பேசுறார்னா…
ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள்ள பாலையும் சேர்த்திட்டாங்கன்னு பொய் பிரச்சாரம் பேசுறாரு. ஸ்டாலினை நிம்மதியா தூங்க விட மாட்டாங்க போல இருக்கு பொன்முடி அப்படிங்கிற அமைச்சர்… அவரு ஓசின்னு பேசி, ஏற்கனவே பெண்களை இழிவு படுத்தினார். இப்போ தொகுதி பக்கம் நீங்க யாரும் வருவதில்லை. ஆனால் கண்டபடி பேசுகிறார் மக்களைப் பார்த்து, கண்டபடி பேசுகிறார்கள். ஆகவே இவர்களை எல்லாம் திருத்த வேண்டும், இவர்களை சரிப்படுத்தனும் என தெரிவித்தார்.