Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |