தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளது.