Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் பள்ளிக்கல்வி செயல்திறன் பட்டியல்…. தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் கல்வியை தீர்க்கமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான பல வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேசமயம் மாநில அரசுகளையும் ஊக்குவித்து வருகின்றது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்களும் தற்போது வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் பள்ளிக்கல்வி ஆனது வெறும் ஏட்டினில் மட்டுமே இல்லாமல் அவர்களின் மனதிலும் பாதிப்பை நல்ல வகையில் ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் மாநில வாரியாக பள்ளிக்கல்வி செயல் திறன் குறித்த ஆய்வு ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. தற்போது 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி செயல்திறன் குறித்த மதிப்பெண் வாரியான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு தமிழகம் 885 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் தமிழகம் மூன்றாம் நிலையை அடைந்துள்ளது.

Categories

Tech |