Categories
மாநில செய்திகள்

“சரி சமமான பலத்தில் திமுக, அதிமுக”….. கரூரில் கொடி நாட்டி வெற்றிப் பெற போவது யார்….? இன்று பரபரக்கும் தேர்தல் களம்….!!!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் அதிமுகவில் 8 உறுப்பினர்களும், திமுகவின் 4 உறுப்பினர்களும் இருந்தார்கள். இதனால் ஆளுங்கட்சிக்கான திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தேர்தலை தேர்தல் அதிகாரி ஒத்திவைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு 4 முறை தேர்தல் நடத்தப்பட்டும் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

இப்படி பல்வேறு சூழ்நிலைகளால் தள்ளிப்போன தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களை திமுகவினர் மிரட்டி தங்கள் பக்கம் இணைத்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அதிமுகவில் 6, திமுகவில் 6 என உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கிறார்கள். தேர்தலில் அதிமுக கட்சியினரை திமுக குறி ‌ வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் குற்றம் சுமத்தியுள்ளார். அதோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்பட 6 உறுப்பினர்களும் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்த எம்.ஆர் விஜய பாஸ்கர் அதிமுக உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறும் வரை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும், தேர்தலை சுமூகமான முறையில் நடத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கரூரில் இன்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவில் 6 மற்றும் திமுகவில் 6 என சம உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இதனால் குலுக்கல் முறையில் தேர்தல் நடத்தினாலும் எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் முறை தவறி சட்டவிரோதமான முறையில் தேர்தலை நடத்தினால் கண்டிப்பாக நாங்கள் சட்டத்தின் உதவியை நாடுவோம் என்று கூறினார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டை என கருதப்படும் கரூர் மாவட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை நிறுபிப்பதற்காக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் ஜெயிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Categories

Tech |