Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள்”…. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கே இடமில்லை….. திமுக அமைச்சர் திட்டவட்டம்….!!!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ஆம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு மக்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பது போன்று சிலர் மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அவர்களின் வீண் முயற்சி கண்டிப்பாக தோற்றுப் போகும். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் வெடி விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்சி வரும் நிலையில் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |