மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்க்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார். ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள்ளையும் , சுயச்சை எம்எல்ஏக்கள் 4 பேரையும் பாஜக கடத்தி விட்டதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜிது பட்வாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்குடன் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் எங்கள் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக கடத்தி வைத்துள்ளார். கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட எம்எல்ஏக்களை மீட்க நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றோம்.
அதேபோல கடத்தப்பட்ட எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் அவரது மகன் ஜெயவர்த்தன் சிங் ஆகியோர் ஹரியானா ஓட்டல் சென்றதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மத்திய பிரதேச கமல்நாத் அரசை கவிழ்ப்பதற்கு பாஜக அதிக அளவு பணம் செலவழித்து வருகிறது. கடத்தப்பட்ட எம்எல்ஏக்களை எப்படியாவது தங்கள் பக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு சதி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக உள்ளது. இந்த நிகழ்வு மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.