இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன் 80 வயதிலும் கூட சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்பு உள்ளிட்டவைகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் மும்பையில் தான் மிகவும் விருப்பப்பட்டு கட்டிய அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தன் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா தொற்று சமயத்தில் மட்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை.
அதன்பின் கொரோனா குறைந்ததை அடுத்து மீண்டுமாக அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து அவர் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அமிதாப்பச்சன் செருப்பு அணியாமல் இருந்தார். அப்போது இதன் பின்னணியில் உள்ள காரணம் பற்றி அமிதாப்பிடம் கேட்டபோது, “நான் எப்போதும் ஜல்சா வீட்டில் ரசிகர்களை சந்திக்கும் போது செருப்பை கழட்டிவிடுவேன்.
ஏனெனில் எனக்கு ரசிகர்கள் எனில் மிகவும் பக்தி. அத்துடன் அவர்களை சந்திப்பதை ஒரு ஆன்மிக நிகழ்ச்சி போன்று நான் நினைக்கிறேன். தன்னை வாழ வைக்கும் தெய்வங்களாகவே அவர்களை நான் பாவிக்கிறேன். அவர்கள் இல்லையெனில் நான் இல்லை. 80 வயதிலும் கூட தன்னை ரசிக்கும் ரசிகர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை இது”என்று கூறினார். அமிதாப்பச்சனின் இந்த பேச்சு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.