வங்கதேசத்திலிருந்து வாக்களித்த மக்கள் அனைவருமே இந்தியர்கள் அவர்கள் யாரும் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இங்கு வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பிரதமரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு நபரைக் கூட வெளியேற்ற முடியாது. அதற்கு அனுமதிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இங்கு வாழ்பவர்கள் அனைவருமே இந்தியர்கள் தான். இங்கு வாழும் ஒரு அகதியும் தங்களின் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்தார்.