போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் வரக்கூடிய டிசம்பர் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பது நடைபெற இருக்கிறது. பேச்சுவார்த்தையில் சங்கத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் சென்னை பல்லவன் சாலையில் இருக்கக்கூடிய நிர்வாக இயக்குனர், அதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் அரசு தரப்பில் பங்கேற்பார்கள். அதேபோல பதிவு செய்த அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.