Categories
மாநில செய்திகள்

பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை…. பதறி போன பெற்றோர்…. பின்னர் நடந்தது என்ன?….!!!!

இரண்டு வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

மதுரை சிம்மக்கல் மணிநகரை சேர்ந்த ஜெகநாதனின் 2 வயது மகள் அஸ்வினி வீட்டில் பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பாத்திரத்தின் உள்ளே தலை மாட்டிக் கொண்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போராடியும் குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க முடியவில்லை.

இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாடினர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தை வெட்டி குழந்தையை மீட்டனர்.

Categories

Tech |