இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முற்றிலும் ஒழியும், ஊழல் மறைந்துவிடும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டது. மக்கள் வங்கிகள், ஏடிஎம் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது twitter பதிவில் கூறியது, கருப்பு பணம் இல்லாத நாடு உருவாகும் என்ற வாக்குறுதியுடன் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாட்டில் பல்வேறு தொழில்களை அழித்ததும், வேலை வாய்ப்புகளை முடக்கியதும், பொருளாதாரத்தை சீர்குலைத்தும் நான் நிகழ்ந்தது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்வியை ஒப்புக்கொண்டே தான் ஆக வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு மக்களின் கைகளில் ரூ.17.7 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுவே இப்போது ரூ.30.88 கோடியாக உள்ளது. இதில் கருப்பு பணம் எங்கே ஒழிந்தது? ஊழலுக்கு எங்கு முடிவு கட்டப்பட்டுள்ளது? என்பதை மத்திய அரசு பிரதமர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.