Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்!!…. இன்று நடை அடைக்கப்படும் கோவில்கள் என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்!!….!!!!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பல கோவில்கள் மூடப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண முடியாது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.39 கிரகணம் தொடங்குகிறது. இதனையடுத்து முழு  கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல்   5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி கிரகணம் தொடங்கி 6.19 மணி அளவில் முடியும். அதிலும் சென்னையில் 5.39  மணி அளவில்  கிரகணத்தை காண இயலும். இந்த கிரகணத்தை முன்னிட்டு கோவையில்  அமைந்துள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நடை சாத்தப்படுகிறது. இதனையடுத்து நாளை காலை 6 மணி முதல் வழக்கம்போல் நடை திறக்கப்படும். இதனையடுத்து வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் நடை சாத்தப்பட்டு நாளை காலை 8  மணிக்கு திறக்கப்படுகிறது.

இந்நிலையில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போது கோவில்களில் ஆகம விதிகளின்படி நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதேபோல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் பிற்பகல் 2.30 மணி அளவில் அடைக்கப்படுகிறது. இந்நிலையில் சந்திர கிரகணம் முடிவடைந்ததும் இரவு 7 மணிக்கு வழக்கம் போல் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனையடுத்து சென்னிமலை முருகன் கோவிலில் மதியம் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படுகிறது. இந்த நிலையில் முழு நேர சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் காலை 8.30  மணிக்கு  திருப்பதியில் நடை அடைக்கப்பட்டது. இதனையடுத்து கிரகணம் முடிந்த பிறகு இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களும் இன்று மூடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் இன்று சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்திலும் நடை திறந்திருக்கும் என்பதால் பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |