இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முற்றிலும் ஒழியும், ஊழல் மறைந்துவிடும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டது. மக்கள் வங்கிகள், ஏடிஎம் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இன்றுடன் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தற்போது நாட்டின் பண பரிவர்த்தனை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆர்பிஐ கூறியது, கடந்த மாதம் 2021 ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களுடைய ரூ.30.88 லட்சம் கோடி பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிவர்த்தனையாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, அந்த நாட்டின் நவம்பர் மாதம் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்து அரை மாதத்தில் ரூ.17.7 லட்சம் கோடிக்கு பணம் வர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களிடையே பரிவர்த்தனை 71.88% அதிகரித்துள்ளது என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசு கூறியதை போல, கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா? கள்ள நோட்டுகள் புழக்கத்திலிருந்து முற்றிலும் ஒளிந்து போனதா? பயங்கரவாதிகளுக்கு பணம் புழக்கமே இல்லாமல் போனதா? இந்த கேள்விகளுக்கு எப்போதுதான் உண்மை தெரியவரும் என்று பலரும் புலம்பி வருகின்றனர்.