Categories
தேசிய செய்திகள்

இனி அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய கூடாது…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்.தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தினசரி ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |