பிரேசிலில் உள்ள அமேசான் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.
அமேசானின் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த படகில் மொத்தம் 94 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அந்தவகையில்,
விபத்தில் சிக்கியவர்களில் 46 பேர் மீட்கப்பட, 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 30 பேரை பிரேசில் அரசு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.