Categories
மாநில செய்திகள்

இன்று சந்திர கிரகணம்…. மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியுமா?…. அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது  சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில்  நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு  கிரகணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பகுதி சந்திர கிரகணம் என்றால் நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும், எனவே முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. இதனால் நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படுகிறது. இந்நிலையில் பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் கிரகணத்தை பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம்.

அதேபோல் இன்று இந்திய நேரப்படி பகல் 2.39 மணி முதல் 6.19 மணி வரை நீடிக்கிறது. இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணி முதல் மாலை 5.15 மணி வரை நிகழும். அதிலும் சென்னையில் மாலை 5.38  மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது. எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு  பகுதியில்  கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்நிலையில் கிரகணத்தை காண தொலைநோக்கிப் போன்ற கருவிகளை கண்களை காத்துக் கொள்ள தனிப்பட்ட கவனமோ  தேவை இல்லை. மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்  தெரியும். இதனையடுத்து அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தமிழகத்தில் இதுபோன்ற பகுதி வேறு சந்திர கிரகணத்தை காணலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |