நம் நாட்டில் பான்கார்டு, சம்பளச்சான்று உள்ளிட்டவை இன்றி தனிநபர் கடன்களை பெற சில வழிகள் உள்ளது. பான்கார்டு மற்றும் சம்பளசான்று இல்லாதவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்து தனி நபர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
# 700 மற்றும் அதற்கு அதிகமான சிபில் ஸ்கோர் இருப்பின் கடன்பெறுவது தொடர்பாக கவலைப்பட வேண்டிய தேவையில்லை. சிபில் ஸ்கோர் மட்டும் இருப்பின் நீங்கள் பான்கார்டு (அ ) சம்பளச்சான்று ஆகிய ஆவணங்களை கொடுக்கவேண்டியதில்லை. இதற்கிடையில் நல்ல சிபில் ஸ்கோர் உங்களது கடனுக்குரிய தகுதியை உயர்த்தும்.
# நீங்கள் நம்பகமானவர்தான் என்பதனை கடனை திருப்பிசெலுத்தும் தன்மை காட்டும். இதுவரையிலும் நீங்கள் கடன்பெற்றிருந்தால், அதை உரிய தவணைகாலத்திற்குள் செலுத்தி இருந்தீர்கள் எனில் இந்த ஒரு தகுதியே கடன் நிறுவனங்கள் உங்களுக்கு கடன் கொடுக்க போதுமானது ஆகும்
# கடன்தகுதியை பூர்த்திசெய்ய நம்பகத் தன்மையை தங்களால் நிரூபிக்க முடியாவிட்டாலும், சொத்து (அ) பிற பத்திரங்களை பிணையமாக வைத்தும் கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
# உரிய ஆவணங்களை வைத்திருக்கும் மற்றும் உங்களது தனி நபர் கடனுக்காக சாட்சி கையெழுத்து போட தயாராக இருக்கும் மற்றொரு நபரை நீங்கள் பெறமுடிந்தால், அவரின் உதவியுடன் கடன் கிடைக்கப் பெறலாம்.
# நிதி நிலை அறிக்கைகள், பதிவுகள் மற்றும் கடந்த கால கடன் பதிவுகள் அனைத்தையும் கடன் வழங்கும் நிறுவனம் மதிப்பீடு செய்ய சமர்ப்பிக்கவும். இதை மதிப்பீடு செய்து உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டால் கடன் வழங்குபவர் உங்களுக்கு கடன் கொடுப்பார்.