Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் – 12இல் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

நவம்பர் 12இல் 10%  இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக இருக்கும் ? என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தினுடைய முடிவிலேயே அனைத்து கட்சியினுடைய கருத்துக்களை கேட்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே வரக்கூடிய 12-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டமானது நடைபெற இருக்கிறது. இதில் தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்று இருக்க கூடிய  கட்சிகளுடைய பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில்  தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாட்டு என்ன ? என்பது குறித்து கருத்துக்கள் அனைத்துக் கட்சி பிரநிதிகள் கருத்துக்களை கேட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தமிழக அரசு முடிவெடுக்க இருக்கின்றது.

Categories

Tech |