உங்கள் ஆதார்கார்டு தொலைந்துபோய்விட்டால் UIDAIன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கு 12 இலக்க ஆதார்எண் (அ) 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை. இதனிடையில் உங்களது ஆதார் காணாமல்போன சூழ்நிலையில், அதன் எண் (அ) பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையெனில் கவலைப்படத் தேவையில்லை. இந்த எண் இல்லாமலும் கூட இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்ய முதலாவதாக பதிவு ஐடியை மீட்டெடுக்க வேண்டும் (Enrolment ID Retrieve)
Enrolment ID பெறுவது எவ்வாறு?
# பதிவு ஐடியைப் பெறுவதற்கு முதலாவதாக UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவேண்டும்.
# பின் உங்களது மொபைல்போனில் Get Aadhaar ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# அதன்பின் Enrollment ID Retrieve விருப்பத்தினை கிளிக் செய்யவேண்டும்.
# உங்களின் அனைத்து விபரங்களையும் பூர்த்திசெய்த பின் Send OTP விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.
# அடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் கிடைக்கும் OTP-ஐ உள்ளிடவேண்டும்.
# பின் உங்களது எண்ணில் என்ரோல்மென்ட் ஐடி (அ) ஆதார் எண் கிடைக்கும்.
ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?
# முதலாவதாக ஆதாரின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.
அதன்பின் டவுன்லோட் ஆதார் எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்ததாக உங்களது ஆதார் எண் (அ) பதிவுஐடியை உள்ளிட வேண்டும்.
# பின் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவேண்டும்.
# அதனை தொடர்ந்து OTP ஐ உள்ளிட வேண்டும்.
# தற்போது உங்களது இ-ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.