EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு அளித்திருந்தனர். இது குறித்து தமிழகம் முதல் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நிதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு. பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் ஜாதினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்ட போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்த ஆலோசித்து முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு எதிரான நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.
சமூக நீதியை காக்க முதல் அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்திட ஒரே சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக சட்ட நிபுணர்களை மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட சட்ட வல்லுநர்கள் குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, மாநில அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, ஏ.அருள்மொழி, வி.லட்சுமி நாரயணன் ஆகியோர்கள் ஆவர். அதனைப் போல அரசு அலுவலர்கள் பா.கார்த்திகேயன், செயலாளர் மற்றும் ச.கோபி ரவிக்குமார், செயலாளர் ஆகியோர்கள் ஆவர். மேலும் பிற வல்லுநர்கள் முனைவர் சுப.வீரபாண்டியன், தலைவர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு மற்றும் செல்வி சி.என்.ஜி.நிறைமதி, வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்ஆகியவர்கள் ஆவர். சிறப்பு அழைப்பாளர் டாக்டர் ரவிவர்மா குமார், மூத்த வழக்கறிஞர், பெங்களூரு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு என்று பிறப்பித்துள்ளார்.