Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது.

மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் குடியிருப்பில் ஒற்றை காட்டு யானை முற்றுகையிட்டதால் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Categories

Tech |