Categories
தேசிய செய்திகள்

“19 வயது பெண்ணை சீரழித்து கொன்ற கும்பல்”….. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்…..!!!!!

இந்திய தலைநகர் ‌ டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

அந்தப் பெண்ணை காரில் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வைத்து கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் கண்களில் அமிலத்தை ஊற்றியதும், அந்தரங்க உறுப்பில் மதுபான பாட்டில்களை சொருகியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் நடந்து 2 வருடங்களுக்கு பிறகு அதாவது கடந்த 2014-ம் ஆண்டு 3 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் குற்றவாளிகள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகள் ரவிக்குமார், ராகுல் மற்றும் வினோத் ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என்று கூறினார். அதோடு 49 சாட்சிகளில் 10 பேரிடம் குறுக்கு விசாரணை செய்யவில்லை எனவும், விசாரணையில் நிறைய விஷயங்கள் விடப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதால் சந்தேகத்தின் பலனாக 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லி போலீசார் கண்டிப்பாக குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைக்ககூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 3 குற்றவாளிகளின் வயது மற்றும் குடும்ப சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த இளம் பெண்ணின் பெற்றோர் நாங்கள் நீதி கேட்டு வந்தபோது எங்களுக்கு பார்வை இழந்த நீதி வழங்கப்பட்டுள்ளது எனவும் எங்களுடைய சட்டப் போராட்டம் தொடரும் எனவும் வேதனையோடு தெரிவித்தனர்.

Categories

Tech |