Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்…. இதான் காரணமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நிஷாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |