Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்த வாலிபர்கள்…. என்ன காரணம்….? பரபரப்பு சம்பவம்….!!

ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் வெள்ளை தாளை மனுவாக கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை வந்தவாசியில் ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் வந்தவாசியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைத்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும், ஒன்றிய பொது நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நிதி குறித்தும், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது குறித்தும் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சக்திவேல் புகார் அளித்துள்ளார்.

அப்போது மாம்பட்டு கிராமம் அண்ணா நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அலுவலகத்திற்குள் வந்து வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி கேட்டபோது எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி, துணை சுகாதார நிலையம் கட்டிடம் , ரேஷன் கடை கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் அளித்தனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டிக்கும் வகையில், வெள்ளை பேப்பரை மனுவாக வழங்கியதாக கூறியுள்ளனர். இதனை கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக மாம்பட்டு பகுதியில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

Categories

Tech |