தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் இவர். இவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் மகள் ஜான்வி கபூர் அந்த இடத்தை நிரப்பி கொண்டு இருக்கிறார். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் கோஸ்ட் ஸ்டோரீஸ், தி கார்கில் கேர்ஸ், ரோஹி, குட்லக் செர்ரி என்ற படங்களில் நடித்து வந்தார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறார்.
இதனிடையே ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி உள்ளார். சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வீடு 6241 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இந்த வீட்டிற்கு ஸ்டாம் யூனிட்டுக்கு மட்டும் 3.90 கோடி ஜான்விகபூர் கொடுத்துள்ளார். 10 படம் கூட இன்னும் முழுமையாக நடிக்காமல், முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்காத இளம் நடிகை ஜான்வி கபூர் எப்படி இத்தனை கோடி சம்பாதித்து வீடு வாங்க முடியும் என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.