Categories
மாநில செய்திகள்

போலீஸ் கிட்ட லத்தி பூ, போட்டு பூஜை செய்யவா இருக்கு – அண்ணாமலை அதிரடி பிரஸ் மீட் ..!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர்  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் அதிகமாக காணப்படுகிறது.

மாணவர்களுக்கு போதை பொருள் எடுத்துக் கொண்ட உடனே தைரியம் வருகிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று தைரியம் வருகிறது. இவையெல்லாம் கடந்த ஒரு வருடமாக உள்ளது. தமிழகத்தில் மதுவும் கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் மேலாக தமிழகத்தில் காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டிருக்கின்றார்கள்.  காவல்துறைக்கு அதிகாரங்கள் கொடுக்க வேண்டும்.

போலீசார் லத்தியை பூ போட்டு பூஜை செய்யவா வைத்திருக்கின்றார்கள் லத்திக்கு என ஒரு மகத்துவம் இருக்கிறது. அதை அவர்கள் எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்த வேண்டும்‌. காவல்துறை சீரழிந்தது என்றால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து விடும். காவல்துறையின் கையை கட்டி போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |