Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு எப்போது தெரியுமா….? வந்தது முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தேர்வு புதிய நடைமுறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டாம் தாள் தேர்வு முதலாவதாகவும், முதல் தாள் தேர்வு இரண்டாவதாகவும் நடத்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வரும் 12 மற்றும் 13 இல் மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணைப்படி தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெறுகிறது.

Categories

Tech |