Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித்தொகை….. நவ.,15 கடைசி தேதி…. அதை விட்டால் பணம் கிடைக்காது….!!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது.

எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு வர நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை பெற விரும்பும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

Categories

Tech |